Latestமலேசியா

லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ; வெளியேறும்படி மக்களுக்கு கோரிக்கை

லாஸ் ஏஞ்சல்ஸ் , நவ 8 – லாஸ் ஏஞ்சல்ஸில் மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகே கட்டுப்பாடற்ற அளவிற்கு காட்டுத் தீ ஏற்பட்டதை  தொடர்ந்து  ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.  தீ மிகவும் வேகமாக பரவியதால் ஏற்கனவே அதிகமான வீடுகள் அழிந்துவிட்டன.  காற்று வேகமாக வீசுவதால்  நிலைமை மேலும் மோசமடையக்கூடும்  என்பதால்  இந்த எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.  Camarillo  என்ற இடத்தை சுற்றிலும்  காட்டுத் தீ ஏற்பட்ட பகுதியிலிருந்து 5 கிலோமீட்டர் பகுதிக்கு தீ பரவியதால்    விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளும் அழிந்தன. 

புதன்கிழமை அதிகாலையில் பரவிய தீ, மறுநாள் 8,100 ஹெக்டேர் பரப்பளவை அழித்துவிட்டது. நாங்கள் இரவு முழுவதும் விழித்திருந்தோம். ஒரு சிலர் வாகனங்களில் பொருட்களை வைத்துக் கொண்டு பாதுகாப்புக்காக  இரவு முழுவதிலும் தூங்காமல் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.   

30,000 மக்கள் வசிக்கும் பகுதியில் தீயை அணைப்பதில் கவனம் செலுத்தி வருவதாக  Ventura  வட்டார  தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.  தரை மற்றும்  ஹெலிகாப்டர் மூலமாகவும் தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சுடன்  ஈடுபட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!