Latestஉலகம்

லெவோடோபி லக்கி லக்கி எரிமலை கக்கும் சாம்பலால், பாலி தீவுக்கான விமானப் பயணங்கள் இரத்து

ஜாகார்த்தா, நவம்பர்-14 – இந்தோனீசியாவின் Nusa Tenggara Timur, Labuan Bajo-வில் 124 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Flores தீவில் Lewotobi Laki-Laki எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், அவர்களில் 53 பேர் கடல் போக்குவரத்து வழியாக Labuan Bajo-விலிருந்து வெளியேறியுள்ளனர்.

ஜாகார்த்தாவிலுள்ள மலேசியத் தூரகம் அத்தகவலைத் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்த மலேசியர்கள், உள்ளூர் அதிகாரிகள் உத்தரவைப் பின்பற்றி நடப்பதோடு, விமான நிறுவனங்களின் அறிவிப்பை அடிக்கடி சரிபார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அந்த எரிமலை வானில் பல கிலோ மீட்டர் உயரத்திற்கு தொடர்ந்து புகையையும் சாம்பலையும் வெளியேற்றி வருவதால் ஆசிய விமான நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

Singapore Airlines, Scoot, Jetstar, மலேசியாவின் AirAsia, இந்தியாவின் IndiaGo உள்ளிட்டவை அவற்றிலடங்கும்.

குறிப்பாக பிரபல சுற்றுலாத் தீவான பாலிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானப் பயணங்களை, பாதுகாப்புக் கருதி அவை நேற்று இரத்துச் செய்தன.

கடந்த சில வாரங்களாகவே வெடித்து வரும் அந்த 1,703 மீட்டர் உயர எரிமலையின் சீற்றத்துக்கு, இதுவரை 9 பேர் பலியாகி 31 பேர் காயமடைந்துள்ளனர்.

அதே சமயம் 11,000-கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!