
உலு சிலாங்கூர், பிப் 3 – பெஹ்ராங் (Behrang), கம்போங் செரிகாலா (Kampung Serigala) பெர்னம் ஆற்றில் (Sungai Bernam ) நேற்று, லோரி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து எண்ணெய் கசிவு மற்றும் வழகத்திற்கு மாறான துர்நாற்றம் தடயங்கள் எதுவும் இல்லையென Luas எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் உறுதிப்படுத்தியது.
சம்பவம் நடந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் அடிப்படையில் இந்த முடிவு அமைந்திருப்பதாக சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுங்கை செலிசிக் (Selisik ) ஆற்றின் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நுழைவாயிலில் ஆற்றின் நீரோட்டம் வழக்கமாக இருப்பது கண்டறியப்பட்டதாக Luas முகநூலில் வெளியிடப்பட்ட பதிவில் தெரிவித்துள்ளது.
நேற்று மதியம் ஒரு மணியளவில் விபத்திற்குள்ளான லோரியிலிருந்து வெளியேறிய எண்ணெய் கசிவு சுமார் 100 மீட்டர் பகுதியில் இருந்ததை தொடர்ந்து LUAS குறியீடு மஞ்சள் நிறத்தை காட்டியதாக ஊடகங்களில் தகவல் வெளியாகின.
லோரியை அகற்றும் நடவடிக்கைக்கு அனுமதி கிடைத்தபோது சம்பந்தப்பட்ட ஆற்றின் கரையில் பழுதுபார்க்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
சுங்கை பெர்னாமில் எஞ்சிய எண்ணெய் கசிவு எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும், உடனடி தடுப்பு மற்றும் இதர நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு நிலையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக Luas தெரிவித்துள்ளது.