Latestஉலகம்மலேசியா

வங்காளதேசத்தில் தொடரும் மதவெறி; இந்துச் சமூகத் தலைவர் அடித்துக் கொலை

டாக்கா, ஏப்ரல்-19- வங்காளதேசத்தில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் தொடருகின்றன.

ஆகக் கடைசியாக முக்கிய இந்து அமைப்பின் தலைவர் ஒருவர் அடித்தே கொல்லப்பட்டுள்ளார்.

Bhabesh Chandra எனும் அவ்வாடவரின் வீட்டுக்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்ம நபர்கள், அவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.

மறுநாள், அதே கும்பல் பேச்சு மூச்சின்றி கிடந்த Bhabesh-ஷை ஒரு வேனில் கொண்டு வந்து வீட்டில் வீசிச் சென்றது.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டவர், ஏற்கனவே இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருவதாக உள்ளூர் போலீஸ் கூறியது.

இச்சம்பவம் அங்குள்ள இந்துக்களை மேலும் சினமடையச் செய்துள்ளதோடு, உள்ளபடியே பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தலையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

அந்த வங்காள விரிகுடா நாட்டில் இந்துக்களின் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், கடைகள் ஆகியவை சூறையாடப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக, கடந்த மாதம் மட்டும் 147 சம்பவங்கள் பதிவானதாக மனித ஈரிமை அமைப்பொன்று கூறுகிறது.

36 இந்துக் கோயில்களுக்குத் தீ வைக்கப்பட்டது உட்பட 408 கோயில்கள் சேதப்படுத்தப்பட்டதும் அவற்றிலடங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!