வங்சா மாஜுவில் வெளிநாட்டு வியாபாரிகளின் கடைகளுக்கு சீல் வைத்த DBKL

கோலாலம்பூர், மார்ச்-2 – வங்சா மாஜு Bazaria சந்தையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 6 வெளிநாட்டு வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் வியாபாரப் பொருட்களுக்கும் கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL சீல் வைத்தது.
வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட Operasi Gasak சோதனையின் போது அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
6 கடைகள் உடனடியாக மூடப்பட்ட வேளை, வெளிநாட்டினர் நடத்தி வந்த 2 food truck வாகனங்களும் tow செய்யப்பட்டன.
காப்புரிமை மீறல் தொடர்பில், போலி பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
மொத்தமாக 35 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
மியன்மார் மற்றும் இந்தோனீசியாவைச் சேர்ந்த அவர்கள், முறையான பயணப் பத்திரம் இல்லாதது, வேலை பெர்மிட்டை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காகக் கைதாகினர்.
கோலாலம்பூர் ஒரு தூய்மையான, ஒழுங்கான மற்றும் பாதுகாப்பான மாநகரமாக விளங்குவதை உறுதிச் செய்ய, இந்த அதிரடிச் சோதனைகள் தொடருன DBKL கூறியது.