Latestமலேசியா

வட மாநிலங்களில் ஏற்பட்டு வரும் இயற்கைப் பேரிடர்களுக்கு, அந்தமான் தீவிலிருந்து நகரும் காற்றே காரணம்

கோலாலம்பூர், செப்டம்பர்-19, நாட்டின் வட மாநிலங்களில் சுமார் ஒரு வாரமாக ஏற்பட்டு வரும் இயற்கைப் பேரிடர்களுக்கு, அந்தமான் கடலின் காற்று நகர்வே காரணமாகும்.

இந்தியப் பெருங்கடலில் உள்ள அந்தமான் கடலிலிருந்து, தென் சீனக் கடலின் வடக்கே அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிக்கு அக்காற்று நகர்ந்து வருவதாக, மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையின் (MET Malaysia) நடவடிக்கைப் பிரிவின் துணைத் தலைமை இயக்குநர் Dr Mohd Hisham Mohd Anip தெரிவித்தார்.

இந்தச் சூழ்நிலையானது, பலத்த காற்றையும் பெரிய அலைகளையும் உண்டாக்குகிறது.

அதோடு perigee நிலையும் இணைந்து கொள்வதால், வழக்கத்தை விட அதிகமான நீர்பெருக்கு ஏற்பட்டு, பெரிய அலைகள் உருவாவதாக Mohd Hisham விளக்கினார்.

Perigee என்பது பூமிக்கு அருகில் நிலவு வருவதும், முழு நிலவுமாகும்.

இந்த பலத்த காற்றுடன், அதிக காற்று ஈரப்பதத்தின் இயக்கமும் கனமழைக்குக் காரணமாகிறது.

எனினும், இந்நிலையை ஏற்கனவே கண்டறிந்து செப்டம்பர் 12-ஆம் தேதியே தாங்கள் எச்சரிக்கை விடுத்து விட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த வாரக் கடைசியிலிருந்து அடைமழை, புயல் காற்று, அதனால் சாலைகளில் சாய்ந்த மரங்கள், கடலில் பெரிய அலைகள், ஃபெரி படகு சேவைகள் பாதிப்பு என வட மாநிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் ஆகிய வட மாநிலங்களில் வியாழக்கிழமை வரை அடை மழை எச்சரிக்கையை MET Malaysia விடுத்திருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!