கோலாலம்பூர், நவம்பர் 18 – வணக்கம் மலேசியாவின் ஏற்பாட்டில், கல்வி அமைச்சின் முழு ஒத்துழைப்புடன் மலர்ந்துள்ளது 12வது மாணவர் முழக்கம், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 2024.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வாதத் திறமைக்கு நல்லதொரு களமாக 12வது முறையாக உதித்துள்ள மாணவர் முழக்கத்தின் இவ்வாண்டிற்கான தேர்வுச் சுற்றிற்கு 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கெடுத்தனர்.
இதில் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்திய 40 மாணவர்கள் காலிறுதிச் சுற்றில் அடியெடுத்து வைத்து, கடந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 15ஆம் திகதி போட்டியிட்டனர்.
சொல்லுக்குச் சொல் இயங்கலை வாயிலாகப் போட்டியிட்ட இவர்களில் 12 நனிச்சிறந்த மாணவர்கள்தான் அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்படவிருந்த நிலையில், மாணவர்களின் உணர்வுபூர்வமும், அறிவுபூர்வமான கருத்துகளும் நடுவர்களின் மனம் தொட்டு அரையிறுதிச் சுற்றுக்குத் 14 மாணவர்கள் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர்.
அரையிறுதிச் சுற்றில் களம் இறங்கவிருக்கும் மாணவர்கள் இவர்கள்தான் :
1. கெடா, கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த கிரிஷன் கோகுலபாலன்.
2. ஜோகூர், தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செஸ்வின் ராவ் ஆனந்தன்.
3. பேராக், ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 1 தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சஸ்மித்தா வசன் குமார்.
4. பஹாங், பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த பவதாரணி மதுரை முத்து.
5. நெகிரி செம்பிலான், கோலப்பிலா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த கனிஸ்கா முனியாண்டி.
6. ஜோகூர், தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த கவின்நேசன் கணேஷ்.
7. கெடா, கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த லூவினேஷ் ராவ் துர்கேஸ் ராவ்.
8. பேராக், பங்கோர் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த வள்ளுவன் ரவீந்திரன்.
9. பேராக், மகிழம்பூ தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சோலமன் பெளல் சந்திரன்.
10. சிலாங்கூர், ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த முனீஸ்வரன் கோவிந்தன்.
11. ஜோகூர், தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சர்வின் ராவ் ஆனந்தன்.
12. சிலாங்கூர், காஜாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ரக்ஷனா பூபாலன்.
13. கெடா, கலைமகல் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த டீயானன் தங்கவேல்லோ.
14. சிலாங்கூர், தெலுக் மெர்பாவ் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த கவினேஷ் ராஜ குமார்.
இவர்களே எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி நடைபெறவுள்ள அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வான மாணவர்களாவர்.
சீரிய வாதங்கள், சீறிப் பாயும் இளம் செல்வங்களின் வாதங்களை நீங்களும் கேட்க விரும்புகிறீர்களா? எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வணக்கம் மலேசியாவின் நேரலையில் இணைய மறவாதீர்!
நாவில் தவழ்ந்தோடும் தமிழுடன் களம் காணும் மாணவர்களுக்கு வணக்கம் மலேசியாவின் மனமார்ந்த வாழ்த்துகள்!