Latestமலேசியா

வரலாற்றுப் பாடத்தின் உண்மைத் தனம் உறுதிச் செய்யப்படும்; கல்வி அமைச்சு உத்தரவாதம்

கோலாலம்பூர், டிசம்பர்-6, பள்ளி மாணவர்களுக்கான வரலாற்றுப் பாடத்தில் உண்மைகள் மறைக்கப்படாமல், உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டும் என்ற கருத்து நேற்றைய மக்களவைக் கூட்டத்தில் கவனத்தை ஈர்த்தது.

அதனை முன்னெடுத்த பேராக் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன், பல்லின மக்கள், மதம், மொழி, கலாச்சாரம் ஆகியவை இந்நாட்டின் விலைமதிப்பில்லா சொத்துக்கள் என வருணித்தார்.

மலேசிய வரலாற்றின் பெருமைமிகு பகுதியாக அவற்றைக் கொண்டாடுவதும் கட்டிக் காப்பதும் நமது கடமையாகும்;

எனவே, வரலாற்றுப் பாடத்தில் மலேசிய இனங்கள், மாநிலங்கள், பிரதேசங்கள் ஆகியவற்றின் சரித்திரங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்; அதை விட முக்கியம், எந்த ஒளிவு மறைவுமில்லாமல், உண்மைகள் மறைக்கப்படாமல் அவைப் பதிவுச் செய்யப்பட வேண்டும்.

இந்நிலையில், அத்தகவல்களின் உண்மைத் தனத்தை அரசாங்கம் எப்படி உறுதிச் செய்யப் போகிறது என கேசவன் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த கல்வி துணையமைச்சர் வோங் கா வோ ( Wong Kah Woh), விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு சேர்க்கப்படும் விவரங்களை, அமைச்சின் வரலாற்று பாடநூல் நிபுணர்கள் சரிபார்த்து அங்கீகரிப்பர் என்றார்.

அமைச்சின் பாடத்திட்ட குறிப்பு மற்றும் பாடநூல் நிபுணர்கள் குழுவில் இருப்பவர்கள் சாதாரண ஆட்கள் கிடையாது…

பொது பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் வரலாற்று பாட நிபுணத்துவத்தில் நம்பகத்தன்மை கொண்டவர்களும் ஆவர்.

USM பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் Dr சிவமுருகன் பாண்டியனும் அவர்களில் அடங்குவார் என துணையமைச்சர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!