
நியூயார்க், ஏப் 8 – டிரம்ப் நிர்வாகத்தின் பெரிய அளவிலான புதிய வரிகள் குறித்த அச்சுறுத்தல் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலையை சரிவிற்கு உட்படுத்தியுள்ளது. அதே வேளையில் இது ஒரு குறுகிய கால நன்மையையும் கொண்டு வந்துள்ளது.
வாடிக்கையாளர்கள் ஐபோன்களை வாங்க சில்லறை விற்பனைக் கடைகளுக்கு குவிகின்றனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆப்பிள் இடங்களைச் சேர்ந்த ஊழியர்கள், வார இறுதியில் வாடிக்கையாளர்களால் நிரம்பியுள்ளதாகக் கூறினர்.
வரிகள் விதிக்கப்பட்ட பிறகு விலைகள் திடீரென உயரக்கூடும் என்று பயனீட்டாளர்கள் கவலை தெரிவித்தனர்.
ஆப்பிளின் அதிகம் விற்பனையாகும் மற்றும் மிக முக்கியமான பெரும்பாலான ஐபோன்கள் சீனாவில் தயாரிக்கப்படுவதால் 54 விழுக்காடு வரி உயர்த்தப்பட்டுள்ளதால் அதற்கான விலை உயரக்கூடும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் ஐபோன் தொலைபேசிகளை வாங்கும் மக்களால் தங்கள் கடையில் பெரும் கூட்டம் அதிகரித்துள்ளதாக ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட ஒவ்வொரு வாடிக்கையாளரும் விலைகள் விரைவில் உயரப் போகிறதா என்று கேள்வியை முன்வைக்கின்றனர் என அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத கடை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
ஐபோன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தட்டபோது கூட அந்த அளவுக்கு கடைகளில் கூட்டம் இல்லை. ஆனால் இப்போது விழாக்காலத்தில் காணப்படுவதைப்போல் கடைகளில் கூட்ட நெரிச்சல் இருப்பதாக கூறப்படுகிறது.