Latestசிங்கப்பூர்
வரி செலுத்தப்படாத 500 சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற மலேசியர் சிங்கப்பூரில் கைது

சிங்கப்பூர், நவம்பர்-4,
சிங்கப்பூருக்கு, வரி செலுத்தப்படாத 500-க்கும் மேற்பட்ட சிகரெட் பொட்டலங்களை கடத்த முயன்றதாக ஒரு மலேசியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
30 வயது சந்தேக நபர், சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையின் போது பிடிபட்டார்.
அவர் பயணித்த வாகனத்தின் மறைவான இடங்களில் அந்த பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவை சட்டவிரோத விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அனைத்து பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; சுங்கச் சட்டத்தின் கீழ் வரிவிலக்கு மற்றும் கடத்தல் குற்றச்சாட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், கடுமையான அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.



