Latestமலேசியா

பெந்தோங் டோல் பிளாசாவில் விபத்து; வாயோதிகர் பலி

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 27 – பெந்தோங் டோல் பிளாசாவில் நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில், வாகனமொன்று பாதுகாப்பு தூணில் மோதி கவிழ்ந்ததில், 65 வயதான வாயோதிகர் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த Sapri Aziz-க்கு தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பெந்தோங் மாவட்ட காவல் துறை தலைவர் Zaiham Mohd Kahar தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த முதியவருடன் பயணித்த அவரது மனைவிக்கு தலையில் லேசான காயங்கள் ஏற்பட்டு பெந்தோங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், அப்பகுதியிலிருந்த CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்படுவதுடன், விபத்தை நேரில் கண்டவர்களைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!