
கோலாலம்பூர், ஜூலை 24 – அதிகாரப்பூர்வ அரசு செயல்முறையின் வழி, உரிமை கோரப்படாத மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த ஊராட்சி மன்றம் முறையான மேம்பாடுகளைச் செய்து வருகின்றது.
உரிமையாளர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள் வாகனங்களை மீட்டெடுக்க விரும்பவில்லை என்பதை ஊராட்சி மன்றம் உறுதி செய்ய வேண்டும் என்பதால், இந்த செயல்முறையை அமல்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலிஹா முஸ்தபா விளக்கியுள்ளார்.
வாகன உரிமையாளர்கள் தங்கள் சொந்த வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கு முழு பொறுப்பேற்பதே உண்மையான தீர்வு என்றும் அவர் மக்களவையில் பதிலுரைத்துள்ளார்.
ஒரு வேலை வாகன உரிமையாளர் இறந்திருந்தால் ஊராட்சி மன்றம் தக்க தளர்வுகளை வழங்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஜனவரி முதல் மே வரை, கைவிடப்பட்ட அல்லது பழுதடைந்த வாகனங்கள் தொடர்பான 1,009 பொது புகார்களை கோலாலம்பூர் ஊராட்சி மன்றம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.