Latestஉலகம்

விண்வெளியில் வரலாற்றுப்பூர்வ நடைப்பயணம்; சாதித்துக் காட்டிய Space X நிறுவனம்

வாஷிங்டன், செப்டம்பர் -13 – விண்வெளி நடைப்பயணத்தை வெற்றிகரமாக நடத்தி, விண்வெளிக்கான தனது வெள்ளோட்டப் பயணத்தில் வரலாறு படைத்துள்ளது Space X நிறுவனம்.

Space X Polaris Dawn விண்கலத்தில் இதர மூன்று சிவிலியன்களோடு பயணமான கோடீஸ்வரர் Jared Isaacman முதலில் விண்வெளியில் கால் வைத்தார்.

நடைப்பயணத்திற்காக Isaacman விண்கலத்திலிருந்து வெளியேறும் போது, அவருக்குக் கீழே பூமி தெரியும் புகைப்படம் வெளியாகி மெய்சிலிர்க்க வைக்கிறது.

பின்னர் SpaceX பொறியியலாளர் Sarah Gillis அவருடன் சேர்ந்து கொண்டார்.

அவர்கள் விண்வெளியில் சுமார் 2 மணி நேரங்கள் நடந்தனர்.

இதன் வழி விண்வெளியில் நடைப்பயணம் மேற்கொண்ட முதல் பொது மக்கள் என்ற வரலாற்றுச் சாதனையை இருவரும் படைத்துள்ளனர்.

இதற்கு முன், 12 நாடுகளைச் சேர்ந்த 263 பேர் விண்வெளியில் நடந்திருந்தாலும், அவர்கள் அனைவரும் விண்வெளி திட்டத்தில் ஈடுபட்ட விண்வெளி வீரர்கள் ஆவர்.

முதன் முறையாக, சுற்றுலா பயணியாக சென்று, விண்வெளியில் நடந்த பெருமையை Isaacman தலைமையிலான குழு பெற்றுள்ளது.

Space X -சின் இவ்வெற்றி வணிக விண்வெளித் துறையின் ‘முன்னோக்கிய மாபெரும் பாய்ச்சல்’ என அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா புகழாரம் சூட்டியது.

விண்வெளி வீரர்கள் சில சமயங்களில் விண்கலத்தை விட்டு வெளியே வந்து ஆய்வு செய்வதே விண்வெளி நடைபயணம் என அழைக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!