கோலாலம்பூர், செப்டம்பர்-19 – விபச்சார நடவடிக்கைகளுடன் தொடர்புப்படுத்தப்படும் மாநகரின் தெருக்களையும் கடை வீதி சந்துகளையும் சுத்தம் செய்ய, கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அங்கு, இளம் தொழில்முனைவோரால் நடத்தப்படும் café சிற்றுண்டிச் சாலைகள், உணவுக் கடைகள், மற்றும் gallery கலைக் காட்சிக் கூடங்கள் போன்றவற்றை திறந்து, அப்பகுதிகளை அழகுப்படுத்துவதும் அவற்றில் அடங்கும்.
கோலாலம்பூர் மேயர் டத்தோ ஸ்ரீ Dr மைமூனா மொஹமட் ஷாரிஃப் (Datuk Seri Dr Maimunah Mohd Sharif) அவ்வாறு கூறியுள்ளார்.
“நாங்கள் ஊக்கத்தொகையை வழங்குகிறோம். அப்பகுதிகளின் நடப்பு செயல்பாடுகளை மாற்றுவதன் மூலம், உதாரணத்திற்கு சுவரோவியங்களைச் சேர்ப்பதன் வழி, பாரீஸ் நகர வீதிகளைப் போல் மாற்ற விரும்புகிறோம்” என்றார் அவர்.
DBKL-லின் அதிகார வரையறை, வளாகங்கள் மற்றும் செயல்பாட்டு உரிமங்களை மட்டுமே உள்ளடக்கும்.
எனவே விபச்சார விடுதிகளைத் துடைத் தொழிப்பதில், போலீஸ் மற்றும் குடிநுழைவுத் துறையுடன் ஒருங்கிணைந்து அமுலாக்கத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என டத்தோ ஸ்ரீ மைமூனா சொன்னார்.
கோலாலம்பூரில் குறைந்த விலையில் விபச்சார நடவடிக்கைகள் பரவலாக நடக்கும் முக்கிய இடங்களாக Jalan Petaling, Jalang Gelang, Jalan Pudu உள்ளிட்ட இடங்களை போலீஸ் ஏற்கனவே அடையாம் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.