விமானப் பயணிகள் ஏறும் பகுதியில் மின் ஸ்கூட்டர் பேக்கஜ் பயன்படுத்த தடை – மலேசியாவின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம்
புத்ரா ஜெயா , நவ 19 – Apron எனப்படும் விமான நிலையங்களில் பயணிகள் விமானங்களில் ஏறும் பகுதிகளில் மின் ஸ்கூட்டர் பேக்கேஜ் பயன்படுத்துவதற்கு மலேசியாவின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAAM) பாதுகாப்பு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த நவம்பர் 15 தேதியிட்ட பாதுகாப்பு உத்தரவில் மின் ஸ்கூட்டர் பேக்கேஜ் (scooter baggage) அல்லது ஸ்மார்ட் லக்கேஜ் பயணிகளுக்கு வசதியாக இருந்தாலும், கையடக்க வசதியாக அதை யன்படுத்துவது பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தும் என மலேசிய சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி கேப்டன் டத்தோ நோரஸ்மான் மாமுட் ( Norazman Mahmud ) தெரிவித்திருக்கிறார். அப்பகுதியில் கனரக இயந்திரங்கள், விமானங்கள், தரை சேவை வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். இதனால் விபத்துக்கள் மற்றும் உபகரணங்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
விபத்துகளின் அபாயத்தைக் குறைக்கவும், விமான நிலைய பாதுகாப்பை மேம்படுத்தவும், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லக்கேஜ் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் வேக வரம்புகளை நிர்ணயிப்பதும், பாதுகாப்பான பயன்பாட்டு நடைமுறைகள் குறித்து பயணிகள் மற்றும் ஊழியர்களுக்குக்கு வலியுறுத்துவது மிகவும் முக்கியம் நோரஸ்மான் மாமுட் தெரிவித்தார்.
ஏப்ரன் என்பது விமான நிலையத்தின் பயணிகள் முனையம் மற்றும் ஓடுபாதைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு திறந்த பகுதியைக் குறிப்பதோடு அங்கு விமானம் புறப்படுவதற்கு முன் அல்லது தரையிறங்கிய பின் நிறுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு தயார் செய்யப்படுகிறது. விமான நிலைய ஏப்ரனின் மற்ற முக்கிய செயல்பாடுகளில் விமானம் மற்றும் முனையத்திற்கிடையே சரக்கு, சாமான்கள் மற்றும் பிற பொருட்கள் மாற்றப்படும் பகுதி, அத்துடன் விமான பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புதல் ஆகியவை அடங்கும்.