
வாஷிங்டன், பிப் 6 -ஒரு பெரிய விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு தனது பெயரை மாற்ற உதவினால், கூட்டாட்சி உள்கட்டமைப்பு நிதியை முடக்குவதை ரத்து செய்வதற்கு ஜனநாய கட்சியின் முன்னணி செனட்டர் ஒருவரிடம் அதிபர் டோனல்ட் டிரம்ப் ( Donald Trump) முன்மொழிந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள கட்டிடங்களில் தனது பெயரைப் பதித்த சொத்துடைமை உரிமையாளரான அதிபர் டிரம்ப், இதற்கு முன் இல்லாத அளவில் நாட்டில் தனது பிம்பத்தையும் மற்றும் கட்டிடங்களில் தனது முத்திரையையும் பதிக்க முயன்றுள்ளார்.
காலஞ்சென்ற முன்னாள் அதிபர் John F. Kennedy யின், கென்னடி கலை வளாகம் மற்றும் நினைவுச்சின்னமான கென்னடி மையத்தின் டிரம்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு, தன்னை “டிரம்ப்-கென்னடி மையம்” என்று மறுபெயரிடுவதற்கு கடந்த டிசம்பர் மாதம் வாக்களித்தது.
இதனிடையே பாரிஸில் உள்ள ஆர்க் டி ட்ரையம்பைப் ( Arc de Triomphe ) போன்ற ஒரு “சுதந்திர வளைவு” கட்டுவதற்கு அவர் அழுத்தம் கொடுத்ததோடு , ஒரு புதிய வெள்ளை மாளிகை பால்ரூம் கட்டுமானத்தைத் தொடங்கினார். அதற்காக கட்டிடத்தின் கிழக்குப் பகுதியை இடித்துத் தள்ளினார்.
அதோடு நியூயார்க்கின் பென் ( Penn நிலையம்) மற்றும் வாஷிங்டனின் (டல்லஸ் Dulles ) அனைத்துலக விமான நிலையத்திலும் தனது பெயரை பதிப்பதற்கு அவர் ஒரு கண் வைத்திருப்பதாக CNN மற்றும் NBC செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.



