
பாசீர் மாஸ், பிப்ரவரி-3, கிளந்தானில் விருந்தினராக நுழைந்த ஒரு மாது, திருமண வீட்டிலிருந்து 2,500 ரிங்கிட்டைத் திருடியதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
2 நிமிடங்கள் 20 வினாடிகள் கொண்ட அந்த டிக் டோக் வீடியோவை MalayanSecretsSociety மறுபதிவு செய்துள்ளது.
அதில், பாஜு கூரோங் மற்றும் பழுப்பு நிற தூடோங் அணிந்த அம்மாது, வீட்டின் வரவேற்பறைக்குள் நுழைந்து, கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என பாசாங்கு செய்வது தெரிகிறது.
இருப்பினும், கழிப்பறைக்குச் செல்லும் வழியில், அவர் வரவேற்பறைக்குத் திரும்பி, அலமாரியின் மேல் பணம் வைக்கப்பட்டிருந்த ஒரு பொட்டலத்தை எடுத்துக் கொண்டார்.
பிறகு அங்கு விளையாடிக் கொண்டிருந்த 2 சிறார்களை ஒரு நோட்டமிட்டு விட்டு அவர்களை கடந்துச் செல்கிறார்.
அம்மாது சில நிமிடங்கள் கழிவறையில் இருந்து விட்டு, வரவேற்பறை அறைக்குள் திரும்பி வந்து, தனது கைப்பையில் பணத்தை வைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
எனினும், வரவேற்பறையில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில் அவரது உருவம் பதிவாகியுள்ளது.
வைரலான இந்த டிக் டோக் வீடியோவுக்கு 199,000 views-களும், 1,826 likes-களும், கிடைத்துள்ளன.
வலைத்தளவாசிகளும் பலவாறான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
அவர்களில் ஒரு பயனர், கிளந்தானில் மிகவும் சக்திவாய்ந்த CCTV கேமராக்கள் இருப்பதை அந்த makcik அறிந்திருக்கவில்லை போலும் என பதிவிட்ட கருத்து பலரின் கவனத்தை ஈர்த்தது.