Latestமலேசியா

விவசாயத்திற்கு அச்சுறுத்தலாம்; 120,000 பச்சோந்திகளைக் கொல்ல தைவானிய அரசு உத்தரவு

தைப்பே, ஜனவரி-26 – விவசாயத்தை அச்சுறுத்துவதால், தைவானில் இலட்சக்கணக்கான பச்சோந்திகளை கொல்ல அந்நாட்டரசு உத்தரவிட்டுள்ளது.

கிழக்காசிய நாடான தைவான், விவசாயம் அடிப்படையிலான பொருளாதாரத்தை அதிகம் நம்பியுள்ளது.

இந்நிலையில், green iguanas எனப்படும் பெரியளவு பச்சைப் பச்சோந்திகளின் எண்ணிக்கை அங்கு அதிகரித்து, விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அவற்றை வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கும் தைவானிய மக்கள், ஒரு வருடத்திற்குப் பிறகு கூண்டுக்குள் அடைக்க முடியாது என்பதால் அவற்றை காட்டுக்குள் விட்டு விடுகின்றனர்.

இதனால் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அவை சேதம் விளைவிக்கின்றன.

கடந்த ஆண்டு 70,000 பச்சோந்திகள் கொல்லப்பட்ட நிலையில், இவ்வாண்டு 120,000 பச்சோந்திகளைக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

வனவியல் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் தகவலின் படி, தைவானில் சுமார் 200,000 பெரிய வகை பச்சோந்திகள் இருக்கின்றன.

மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட இவ்வகைப் பச்சோந்திகளை இரையாக்கும் உயிரினங்கள் தைவானில் இல்லையென்பதும், அவற்றின் எண்ணிக்கை பெருகுவதற்குக் காரணமாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!