
செப்பாங், ஜனவரி-27 – செப்பாங்கில் உள்ள பேரங்காடியில் மனைவியின் கன்னத்தில் அறைந்த கணவரைப் போலீஸார் அடையாளம் கண்டு வருகின்றனர்.
கோத்தா வாரிசானில் நிகழ்ந்த அச்சம்பவம், வேறு யாரோ சமூக ஊடகத்தில் செய்த நேரலையில் தற்செயலாக பதிவாகி விட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டது 35 வயது தனது அக்காள் தான் என ஒர் ஆடவர் புகார் செய்துள்ளார்.
கன்னத்தில் அறைந்தது அவரின் 50 வயது கணவராகும்.
இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளிகளின் வாக்குமூலங்களும் பதிவுச் செய்யப்பட்டு வருகின்றன.
குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
முன்னதாக வைரலான 29 வினாடி நேரலையில், பேரங்காடியிலிருந்து வெளியே வரும் ஒரு மாதுவை, தொப்பி அணிந்திருந்த ஆடவர் நெருங்கி பொது மக்கள் முன்னிலையில் அப்பெண்ணின் கன்னத்தில் அறைந்து விட்டுச் சென்றார்.