அமெரிக்கா, செப்டம்பர் 23 – அமெரிக்காவின் பாஸ்டன் (Boston) பகுதியில் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத கொலை வழக்கு ஒன்று, வீட்டுக்கு வெளியே ஆடவர் ஒருவர் துப்பிய எச்சினால் முடிவுக்கு வந்துள்ளது.
பாஸ்டன் பகுதியில் 35 வருடங்களுக்கு முன், கரேன் டெய்லர் (Karen Taylor) என்ற இளம் தாயார் கொல்லப்பட்ட வழக்கில் தற்போது ஜேம்ஸ் ஹோலோமன் (James Holloman) என்பவர் கைதாகியுள்ளார்.
கொலை நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட DNA ஆதாரங்களும், தற்போது கைதான ஆடவருடன் தொடர்பிருப்பதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
சம்பவத்தன்றே டெய்லரின் (Taylor) உடல் அருகே ஹோலோமன் (Holloman) இருந்ததற்கான அடையாளங்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.
ஆனால், அவனை கொலையாளி என்பதை உறுதி செய்ய முடியாமல் போனது.
இந்நிலையில், கடந்த ஆண்டு வீட்டுக்கு வெளியே நடைபாதையில் ஹோலோமன் (Holloman) எச்சில் துப்ப, அதிலிருந்து DNA ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்து, சோதனையில் உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்தே அவன் கைதாகியுள்ளான்.
1988ஆம் ஆண்டு, மே மாதத்தில், 15 முறை கத்தியால் மார்பில், தலையில் மற்றும் கழுத்தில் குத்தப்பட்ட நிலையில், அந்த 25 வயது இளம் தாயார் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.