![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/ade17a991c22a9ad9a6827032539709e-780x470.jpg)
சிங்கப்பூர், பிப்ரவரி-7 – சிங்கப்பூரில் 12 மாத சிறைவாசம் அனுபவித்து வரும் போக்குவரத்து முன்னாள் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இன்று முதல் வீட்டுக் காவல் நடப்புக்கு வருவதை சிங்கப்பூர் சிறைச்சாலை சேவைத் துறையான SPS உறுதிப்படுத்தியது.
குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன் எஞ்சிய சிறைக்காலத்தை அவர் வீட்டில் கழிப்பார்.
மின்னணு கண்காணிப்பு சாதனத்தை அணிந்திருப்பது, வேலை, படிப்பு அல்லது பயிற்சிகளில் ஈடுபடுவது, SPS-சிடம் ஆலோசனைச் சேவைகளைப் பெறுவதும் அந்நிபந்தனைகளில் அடங்கும்.
அமைச்சராக இருந்த காலத்தில் 403,000 டாலர் மதிப்புடைய பரிசுகளைப் பெற்றதற்காக ஈஸ்வரனுக்கு 12 மாத சிறை விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அவர் சிறைவாசத்தைத் தொடங்கினார்.
சிங்கப்பூர் சிறைச்சாலை சட்டத்தின் படி, நன்னடத்தை அடிப்படையில், சிறைத் தண்டனையில் மூன்றில் இரண்டு பகுதியை முடித்த ஒரு கைதியை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியும்.
அப்படிப் பார்த்தால், குறைந்தது இன்னும் 4 மாதங்கள் அவர் சிறைவாசத்தை அனுபவிக்க வேண்டும்.