தெலுக் இந்தான், செப்டம்பர் -11 – பேராக், தெலுக் இந்தானில் பெண் வழக்கறிஞர் ஒருவர் love scam காதல் மோசடியில் சிக்கி RM1.75 Million ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.
ஜூலை மாத வாக்கில் WhatsApp வாயிலாக அறிமுகமான வெளிநாட்டு ஆடவனை நம்பியதால் அவருக்கு அக்கதி.
கடல் மார்க்க புவியியல் ஆய்வாளர் எனக் கூறியவன், திரங்கானு கடலோரத்தில் கடலடி டாங்கி கட்டுமானத்திற்காக மலேசியா வந்த போது, தம்மிடமிருந்த ரொக்கப் பணம் அத்தனையும் திருடுப் போனதாக 58 வயது அம்மாதுவை நம்ப வைத்துள்ளான்.
‘இணையக் காதலன்’ கஷ்டப்படுவதை பொறுக்காத அம்மாது, அவன் கொடுத்த வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 17 லட்சத்து 57 ஆயிரத்து 490 ரிங்கிட் (RM1,757,490) பணத்தைப் போட்டுள்ளார்.
பணத்தை நிச்சயம் திருப்பிக் கொடுத்து விடுவதாக வாக்குறுதி அளித்தவனிடமிருந்து இதுவரை 1 காசு கூட வரவில்லை.
இதையடுத்தே தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து, அம்மாது திங்கட்கிழமை போலீசில் புகார் செய்தார்.