கோத்தா பாரு, நவம்பர்-30, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,000 மாணவர்கள் நாட்டில் எந்தவொரு தேர்வு மையத்திலும் SPM தேர்வை எழுதலாம் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
நாளை மறுநாள் தொடங்கும் அப்பொதுத் தேர்வில் அவர்கள் அமருவதை உறுதிச் செய்வதற்காக அத்தளர்வு வழங்கப்படுவதாக ஃபாட்லீனா சிடேக் (Fadhlina Sidek) கூறினார்.
அந்தந்த மாநிலக் கல்வி இலாகாக்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமென்றார் அவர்.
இவ்வேளையில் நாடளாவிய நிலையில் 163 பள்ளிகளும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
தவிர 286 பள்ளிகள் வெள்ள நிவாரண மையங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, கிளந்தான் கோத்தா பாருவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு ஃபாட்லீனா சொன்னார்.
டிசம்பர் 2 முதல் பிப்ரவரி 6 வரை நடைபெறும் SPM தேர்வில் 3,000-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் 402,956 மாணவர்கள் அமரவிருக்கிறனர்.