Latestஉலகம்

வெள்ளத்தைத் தடுக்கத் தவறிய 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை – வட கொரிய அதிபரின் அதிரடி நடவடிக்கை

வட கொரியா, செப்டம்பர் 5 – இவ்வாண்டு ஜூலை மாதத்தில் வடகொரியா மாகாணத்தைப் புரட்டிப் போட்ட வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜகாங் (Jagang) மாநிலத்தில் ஆயிரம் பேர் மாண்டிருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, வெள்ளத்தையும் அதனால் ஏற்பட்ட சேதங்களையும் தடுக்கத் தவறியதாகக் கூறி, கடந்த மாதம் 20 முதல் 30 அரசாங்க அதிகாரிகளுக்கு மரண தண்டனை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்னால் விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

முன்னதாக, ஜூலை பிற்பகுதியில் அவசரக் கூட்டத்தைக் கூட்டிய கிம் ஜோங் உன், கடமை தவறி, பலர் உயிரிழக்க காரணமாக இருந்த அதிகாரிகள் அனைவரும் தண்டிக்கப்படுவர் எனக் கூறியிருந்தாகக் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!