Latestமலேசியா

வேலைத் தேடி ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்கு நீந்தியே போன 2 வங்காளதேசிகள் கைது

ஜோகூர் பாரு, நவம்பர்-1,

வேலைத் தேடும் முயற்சியில் ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூருக்கு சட்டவிரோதமாக நீந்தியே செல்ல இரு வங்காளதேசிகள் மேற்கொண்ட முயற்சி, தோல்வியில் முடிந்திருக்கிறது.

மலேசியாவையும் சிங்கப்பூரையும் நேரடியாக இணைக்கும் RTS ரயில் சேவையின் தண்டவாளக் கட்டுமானத் தூண்கள் வழியாக, அக்டோபர் 20-ஆம் தேதி இரவு 10 மணிக்கு இருவரும் சிங்கப்பூர் புறப்பட்டுள்ளனர்.

எனினும் 9 லிட்டர் பெரிய பிளாஸ்டிக் பாட்டிலை சுவாச உதவிக் கருவியாகப் பயன்படுத்தி நீந்திச் சென்ற இருவரும், மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சிங்கப்பூர் நீரிணையில் போலீஸ் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

உடனடியாக கைதாகி குடிநுழைவுத் துறைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட இருவரும், குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து, ஒருவருக்கு 6 வாரங்கள் சிறையும், 3 பிரம்படிகள் தண்டனையும் விதிக்கப்பட்ட வேளை, இன்னொருவருக்கு 8 வாரங்கள் சிறையும், 4 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!