
கோலாலம்பூர், மார்ச்-7 – கோலாலம்பூரில் DBKL அமுலாக்க அதிகாரிகளுடன் கைகலந்து, அவர்களைத் தாக்கியதாக நம்பப்படும் நால்வர் விசாரணைக்காத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
புதன்கிழமையன்று இரு வேறு இடங்களில் அச்சம்பவங்கள் நடந்துள்ளன.
அரசு ஊழியர்களை, தங்கள் கடமையைச் செய்வதிலிருந்த தடுத்ததன் பேரில், 15 முதல் 39 வயது வரையிலான சந்தேக நபர்கள் கைதானதாக, டாங் வாங்கி போலீஸ் தலைவர் Sulizmie Affendy Sulaiman கூறினார்.
காயம் விளைவித்தற்காக குற்றவியல் சட்டத்தின் கீழும் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
முதல் சம்பவம், லோரோங் பெந்தேங்கில் காலை 11.30 மணிக்கு நிகழ்ந்தது.
போக்குவரத்தை மறைத்துக் கொண்ட தனது food truck லாரியை அப்புறப்படுத்துமாறு அமுலாக்க அதிகாரிகள் கூறவே, சந்தேக நபரான பெண் அவர்களுடன் சண்டைக்கு வந்தார்.
கைகலப்பில் அப்பெண் கடித்ததில் ஓர் அதிகாரி காயமடைந்தார்.
உடனடியாகப் அப்பெண் கைதுச் செய்யப்பட்டு 2 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டார்.
இரண்டாவது சம்பவம் மஸ்ஜித் இந்தியாவில் ஒரு கடைக்கு முன்பாக சில வியாபாரிகளுக்கும் அமுலாக்க அதிகாரிகளுக்கும் இடையில் இரவு 10 மணியவில் நிகழ்ந்தது.
அங்கும் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், DBKL அதிகாரி ஒருவர் வலுக்கட்டாயமாகத் தள்ளிவிடப்பட்டார்; இதையடுத்து 15 முதல் 39 வயதிலான 3 ஆடவர்கள் கைதாகினர்.
அம்மூவரில் ஒருவருக்கு ஏற்கனவே போதைப் பொருள் தொடர்பான குற்றப்பதிவு உள்ளதும் கண்டறியப்பட்டது.
அவர்கள் மார்ச் 8 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.