![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/MixCollage-07-Feb-2025-03-04-PM-3865.jpg)
கோலாலம்பூர் , பிப் 5 – சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமய போதகர் ஷக்கிர் நய்க் (Zakir Naik) பிப்ரவரி 2ஆம் தேதி பெர்லீசில் சொற்பொழிவு ஆற்றியதாக வெளியாகியிருக்கும் தகவல் குறித்து போலீஸ் மற்றும் உள்துறை அமைச்சு விளக்கம் அளிக்க வேண்டும் என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஷக்கிர் நய்க்கிற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவின் நிலை குறித்து போலீஸ் ஆராயும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுட்டியோன் வெளியிட்டிருக்கும் கருத்தை தாம் வரவேற்றாலும் பொதுமக்களின் முக்கியத்துவத்தை கருதி இந்த விவகாரத்தில் விரைவான விளக்கம் தேவையென அவர் வலியுறுத்தினார்.
மலேசியாவில் பல்வேறு இனங்களையும் சமயங்களையும் கொண்ட மக்கள் இருந்து வந்தாலும் கடந்த 67 ஆண்டு காலமாக நாடு ஐக்கியத்துடனும் ஒற்றுமையாகவும் இருந்து வருகிறது.
எந்தவொரு நபரும் நமது தேசிய ஒற்றுமை, ஐக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்படுத்துதை நாம் அனுமதிக்கவோ அல்லது இதில் விட்டுக்கொடுக்கவோ முடியாது என குலசேகரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.