
கோலாலம்பூர், ஜூலை 24 – போலி ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி சீனாவின் ஷாங்காய் நகரில் வசித்து வரும் தொழிலதிபர் லோ டேக் ஜோ மீதான குற்றச்சாட்டுகளுக்கு நம்பகமான ஆதாரங்கள் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் கூறியுள்ளார்.
மேலும் ஜோ லோவின் இருப்பிடத்தை துல்லியமாக உறுதிப்படுத்த சர்வதேச அமலாக்க நிறுவனங்களுடன் தனது தரப்பினர் மிக நெருக்கமாக பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளிவந்தவை வெறும் ஊடக செய்தி என்றும் அது சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரின் தனிப்பட்ட அறிக்கை என்றும் விளக்கப்படுத்தப்பட்டுள்ளது.
1MDB ஊழலை முன்னர் அம்பலப்படுத்திய இரண்டு பிரபல புலனாய்வு பத்திரிகையாளர்களான பிராட்லி ஹோப் மற்றும் டாம் ரைட் ஆகியோரால் இத்தகவல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.