
புத்ராஜெயா, பிப்ரவரி-23 – சிலாங்கூர் ஷா ஆலாமில் ஆட்டிசம் குறைபாடு கொண்ட 6 வயது சிறுமி சித்ரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் taska சிறார் பராமரிப்பு மையம், விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படவில்லை என்பது அம்பலமாகியுள்ளது.
Tadika பாலர் பள்ளியாக மட்டுமே அம்மையம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது; அப்படியிருக்க Taska சிறார் பராமரிப்பு மையமாக செயல்படவோ, 4 வயதுக்குக் கீழ்பட்ட குழந்தைகளை அது பெறவோ முடியாது என சமூக நலத்துறையான JKM அறிக்கையொன்றில் கூறியது.
இதையடுத்து விதிமுறை மீறலுக்காக, taska சட்டத்தின் கீழ் அந்த பாலர் பள்ளியின் செயல்பாட்டை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த பாலர் பள்ளி நடத்துநரும் விசாரணைக்காக சிலாங்கூர் JKM அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட பாலர் பள்ளியில் ஆட்டிசம் குறைபாடுடைய தங்களது குழந்தை சித்ரவதை செய்யப்பட்டதாக, அதன் பெற்றோர் போலீஸில் புகாரளித்ததை அடுத்து JKM அறிக்கை வெளியிட்டது.
குழந்தையின் முதுகு சிவந்துபோயிருந்ததோடு வலது கண்ணுக்கு கீழே வீக்கம் காணப்பட்டதாக போலீஸ் புகாரில் கூறப்பட்டுள்ளது.
அச்சம்பவம் 2001 சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.