Latestமலேசியா

ஸைய்ன் ராயன் வழக்கில் அலட்சியக் குற்றச்சாட்டை கைவிடுவதற்கான பெற்றோரின் முயற்சியை சட்டத்துறை அலுவலகம் நிராகரித்தது

கோலாலம்பூர், டிச 6 – Zayn Rayyan வழக்கில் அலட்சியமாக இருந்ததாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுக்களை கைவிடக் கோரும் பெற்றோரின் முயற்சியை சட்டத்துறை அலுலகம் நிராகரித்தது. பெற்றோரின் அந்த விண்ணப்பத்தை அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜா ஸைசுல் பரிடா (Raja Zaizul Faridah ) தள்ளுபடி செய்த செய்த முடிவை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஷலிஷா வார்னோ ( Syahliza Warnoh ) இன்று தெரிவித்தார். இதற்கு முந்தைய வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனு நிராகரிக்கப்பட்டது குறித்து புதிய வழக்கறிஞர்களிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். எனவே வழக்கு விசாரணையை நாங்கள் தொடர்வோம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

நீதிபதி இந்த முடிவை அறிவித்தபோது Zayn Rayyan பெற்றோர் Zaim ikhwan , iSmanira Abdul Manaf ஆகியோர் அமைதியாக காணப்பட்டனர். வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன் தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் அரசு தரப்பு புதுப்பிக்கும் பொருட்டு இந்த வழக்கை செவிமடுப்பதற்கான மற்றொரு தேதியை நிர்ணயிக்க வேண்டும் என டிபிபி Raja Zaizul கோரிக்கை விடுத்தார். ஜனவரி 10 ஆம்தேதி இந்த வழக்கை செவிமடுப்பதற்கு நீதிமன்றம் செய்த முடிவை அனைத்து தரப்பினரும் பரஸ்பரம் அடிப்படையில் ஏற்றுக்கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!