கோலாலம்பூர், நவம்பர்-29, கோலாலம்பூர் ஸ்தாப்பாக்கில் தனியார் பல்கலைக்கழக மாணவர் தங்கும் விடுதியில் இரத்த வெள்ளத்தில் 3 பூனைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 17-ல் ஜாலான் கெந்திங் கிள்ளானில் நிகழ்ந்த அச்சம்பவம் குறித்து புகார் பெற்றிருப்பதை, வங்சா மாஜூ போலீஸ் தலைவர் லாசி’ம் இஸ்மாயில் (Lazim Ismail) உறுதிபடுத்தினார்.
விலங்குகள் மீதான நாசவேலை தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 428-வது பிரிவின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
மாணவர் குடியிருப்புப் படிகட்டில் பூனைகள் செத்துக்கிடந்ததை, ஒரு மாணவர் பதுகாவலரிடம் தெரிவித்திருக்கிறார்.
அதன் பிறகே அது வைரலாகி போலீஸ் வரை சென்றது.
தலையில் குத்தப்பட்ட காயங்களுடன் அப்பூனைகள் இறந்துகிடந்த வீடியோ முன்னதாக டிக் டோக்கில் வைரலானது.
அதைப் பார்த்து சினமுற்ற வலைத்தளவாசிகள், கால்நடை சேவைத் துறையும் போலீசும் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.