
செர்டாங், அக்டோபர்-24, சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கான், தாமான் யுனிவர்சிட்டியில் பழக்கடை அருகே பெண்ணின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற ஆடவனை, செர்டாங் போலீஸ் தேடி வருகிறது.
நேற்று முன்தினம் மதியம் வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், 37 வயது அப்பெண் 3,000 ரிங்கிட் இழப்பைச் சந்தித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காயமேதும் ஏற்படவில்லை என செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் A A அன்பழகன் தெரிவித்தார்.
நீல நிற Yamaha LC 135 ரக மோட்டார் சைக்கிளில் வந்த அவ்வாடவன், அப்பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடுவது முன்னதாக வைரலான வீடியோவில் தெரிந்தது.
உணவு அனுப்பும் p-hailing ஓட்டுநர்களைப் போல் அவன் உடையணிந்திருந்தான்.
அவனை அடையாளம் காண முயன்று வரும் போலீஸ், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளின் உதவியையும் நாடியுள்ளது.