
செர்டாங், ஜூலை-24- ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள பிளாஸ்டிக் தளவாடத் தொழிற்சாலை, இன்று விடியற்காலை காலை ஏற்பட்ட பெருந்தீயில் அழிந்தது.
அதிகாலை 3 மணிக்கு தகவல் கிடைத்து விரைந்த தீயணைப்பு – மீட்புத் துறை, தீயை அணைக்க 4 மணி நேரங்களை எடுத்துக் கொண்டது.
வாகனங்களுக்கான பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கும் அந்தத் தொழிற்சாலை 60 விழுக்காடு தீயில் அழிந்தது.
எனினும், யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை.
தீ ஏற்பட்டதற்கான காரணமும் நட்டமும் விசாரணையில் உள்ளன.