Latestமலேசியா

ஹரி ராயாவை முன்னிட்டு தாவாவ் செல்லும் Batik Air பயணிகளை வழியனுப்பி வைத்த அந்தோனி லோக்

செப்பாங், மார்ச்-29- மலேசியர்கள் மகிழ்ச்சியான ஹரி ராயா பண்டிகைகளுக்குத் தயாராகி வரும் நிலையில், ஒற்றுமை மற்றும் கொண்டாட்டத்தின் உணர்வில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் நேற்று KLIA விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

Batik Air-ரின் OD 7908 விமானத்தின் மூலம் சபாவின் தாவாவ் நகருக்குப் புறப்படும் பயணிகளை அவர் வழியனுப்பி வைத்தார்.

அமைச்சரே அவர்களை வரவேற்று, ஹரி ராயா வாழ்த்துக்களைத் தெரிவித்து, பெருநாள் பரிசுப் பைகளையும் வழங்கினார்.

அந்த சிறப்பு வழியனுப்பு நிகழ்வோடு தங்களின் அன்புக்குரியவர்களுடன் பெருநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கச் செல்லும் 160 பயணிகளுடன் இரவு 9 மணிக்கு விமானம் புறப்பட்டது.

அதே நிகழ்வில் கலந்து கொண்ட Batik Air நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ சந்திரன் ராம முத்தி, பண்டிகை காலத்தில் தடையற்ற பயணத்தை எளிதாக்குவதில் விமான நிறுவனத்தின் கடப்பாட்டை மறு உறுதிப்படுத்தினார்.

இந்த நோன்புப் பெருநாள் காலத்தில், Batik Air தனது விமானப் பயணங்களை கணிசமாக அதிகரித்துள்ளது; குறிப்பாக முக்கிய உள்நாட்டு வழித்தடங்களில், கொண்டாட்டங்களுக்காக வீடு திரும்பும் பயணிகளுக்கு கூடுதல் பயணத் தேர்வுகளை வழங்குவதாக அவர் சொன்னார்.

கோலாலம்பூர்-தாவாவ் வழித்தடத்தை எடுத்துக் கொண்டாலே, விமானச் சேவைகள் இரட்டிப்பாகி, ராயாவுக்கு முந்தைய வாரத்தில் 2,700 க்கும் மேற்பட்ட பயணிகளுகளைக் கொண்டுச் சென்றுள்ளோம்.

இதே கடந்தாண்டு வெறும் 1,100 க்கும் மேற்பட்ட பயணிகளை மட்டுமே கொண்டுச் சென்றோம்.

அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப, ஹரி ராயாவுக்கு முந்தைய வாரத்தில் தாவாவுக்கான விமானங்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது; இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 7 கூடுதல் விமானங்களைக் காட்டிலும் அதிகமாகும்.

இந்தச் சேவை விரிவாக்கமானது, அதிகமான குடும்பங்கள் எளிதாக மீண்டும் ஒன்றிணைய முடியும் என்பதை உறுதிச் செய்கிறது; பண்டிகைக் காலத்தில் இணைப்பை மேம்படுத்துவதற்கான Batik Air நிறுவனத்தின் கடப்பாட்டையும் இது வலுப்படுத்துவதாக அவர் சொன்னார்.

பண்டிகைக் கால சிறப்பு முன்னெடுப்பாக Batik Air, சரவாக்கிற்கு வெறும் RM319, சபாவிற்கு RM379 என்ற கட்டணத்தில் ஒரு வழிப் பயணச் சேவையை வழங்குகிறது.

KLIA மற்றும் சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையம், ஆகிய இரண்டிலிருந்தும் விமானங்கள் இயக்கப்படுகின்றன

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!