
புத்ராஜெயா, ஜனவரி-11 – மலேசியாவின் வேலையின்மை விகிதம் கடந்த 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவுக்கு இறங்கியுள்ளது.
2025 நவம்பரில், நாட்டில் வேலையில்லா திண்டாட்ட விகிதம் 2.9 விழுக்காட்டுக்குக் குறைந்தது.
இது 2014-க்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மடானி அரசாங்கத்தின் கீழ் நாட்டின் வேலைவாய்ப்பு சந்தை நிலையாக வளர்ந்து வருவதை இது காட்டுவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
சேவைத் துறை, கட்டுமானம், உற்பத்தி போன்ற பிரிவுகள் அதிக வேலைவாய்ப்புகளை தொடர்ந்து வழங்குகின்றன.
இந்நிலைமை, அரசின் பொருளாதார வளர்ச்சி முயற்சிகளின் பலனாகும் என்றார் அவர்.



