
கோலாலம்பூர், ஜனவரி-29-கடந்த 12 ஆண்டுகளில் நாட்டில் 26 பயங்கரவாதத் தாக்குதல் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.
தனிநபர்கள், கும்பல்கள் என நூற்றுக்கணக்கான சந்தேக நபர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்; பலர் ISIS தீவிரவாத கும்பலுடன் தொடர்புடையவர்கள் என, தேசியப் போலீஸ் படையின் துணைத் தலைவர் தான் ஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.
தாக்குதலுக்குத் திட்டமிட்டவர்களால் குறிவைக்கப்பட்டவை, பெரும்பாலும் பொது மக்கள் கூடும் இடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றம் முக்கிய நிகழ்வுகள் என்றார் அவர்.
இந்த 2012-2024 காலக்கட்டத்தில் 2 பயங்கரவாதத் தாக்குதல்க க் எப்படியோ நடந்துவிட்டன.
ஒன்று, 2016-ஆம் ஆண்டு பூச்சோங்கில் கேளிக்கை மையமொன்றில் நடந்த குண்டுவெடிப்பு- மற்றொன்று 2024 மே மாதம் ஜோகூர் உலு திராம் போலீஸ் நிலையத்தில் 2 போலீஸ்காரர்களை பலிகொண்ட தாக்குதல் ஆகும்.
பெரிய அளவிலான திட்டங்கள் குறைந்தாலும், இணையத் தீவிரவாதம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.
இதனால், சிறப்பு பிரிவு தொடர் கண்காணிப்பு, தடுப்பு கைது, சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஆயோப் கான் கூறினார்.



