122-ஆவது இடத்திற்கு சரியும் அபாயத்திலிருக்கும் Harimau Malaya-வின் Fifa தரவரிசை

கோலாலம்பூர், டிசம்பர் 18 – தகுதி இல்லாத வீரரை களமிறக்கியதன் காரணமாக, மலேசிய தேசிய கால்பந்து அணியான Harimau Malaya உலக தரவரிசையில் கடும் சரிவை சந்திக்க உள்ளது.
இந்நிலையில் Harimau Malaya-வின் முந்தைய மூன்று போட்டி முடிவுகளை Fifa இரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், சிங்கப்பூர் மற்றும் பாலஸ்தீனுக்கு எதிரான இரண்டு வெற்றிகளும், Cape Verde அணியுடன் பெற்ற சமநிலை கோல் கணக்குகளும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனை, Fifa ஒழுக்கக் குறியீட்டு பிரிவின் அடிப்படையில் விதிக்கப்பட்டதாக விளையாட்டு சட்ட நிபுணர் Nik Erman Nik Roseli தெரிவித்தார்.
நட்புறவு போட்டிகளும் தரவரிசை கணக்கில் சேர்வதால், மலேசியா புள்ளிகளை இழக்கும். தற்போது 1,168.41 புள்ளிகளுடன் 116-ஆவது இடத்தில் உள்ள மலேசியா, சுமார் 22.95 புள்ளிகளை இழந்து, 122-ஆவது இடத்திற்கு சரியக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தப்
புதிய தரவரிசை நாளை அதாவது டிசம்பர் 19 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.



