
கோலாலம்பூர், ஜன 17 – பண்டார் துன் ரசாக் சுற்று வட்டாரத்தில் சாலையின் கையிருப்பு நிலப் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த நான்கு நிர்மாணிப்புகளை கோலாலம்பூர் மாநாகர் மன்றம் உடைத்தது. அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த அந்த நிர்மாணிப்புகள் 1974ஆம் ஆண்டின் சாலை ,கால்வாய் மற்றும் கட்டிட சட்டத்தின் கீழ் உடைக்கப்பட்டதாக கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் முகநூலில் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சட்டவிரோத நிர்மாணிப்பு இடங்களை தகர்த்தெறியும் நடவடிக்கையில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் தொடர்ந்து ஈடுபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.