15,000 அடி உயரத்தில் விமானத்தில் சிக்கிய Skydiver ; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அதிசயம்

ஆஸ்திரேலியா, டிசம்பர் 12 – ஆஸ்திரேலியாவில் ‘skydiver’ ஒருவரின் ‘reserved’ அதாவது இருப்பு பாராசூட் திடீரெனத் திறந்துக்கொண்டதால், அவர் 15,000 அடி உயரத்திலிருந்த விமானத்தில் தொங்கிக்கொண்டிருந்த காட்சி வலைத்தளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஸ்கைடைவரின் பாராசூட் கைப்பிடி தவறுதலாக விமானத்தின் சிறகில் சிக்கி உடனே திறந்துவிட்டது. இந்நிலையில் அவர் வானில் தொங்கியப்படி பாராசூட் கயிறுகளை வெட்டத் தொடங்கினார்.
சுமார் ஒரு நிமிடத்தில் கயிறுகளை வெட்டி தன்னை விடுவித்து கொண்ட அவர் சிறிய காயங்களுடன் மயிறிலையில் உயிர்தப்பினார் என்றுதான் சொல்ல வேண்டும்.
சம்பவம் நடந்தபோது, விமானத்தில் இருந்த 17 பேரில் 13 பேர் பாதுகாப்பாக குதித்தனர். விமானி விமானத்தை பாதுகாப்பாக தரையிறங்கியப்போதும் விமானத்தின் வால்பகுதி சேதமடைந்தது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, Freefall Club என்ற அமைப்பு அனைத்து ஸ்கைடைவர்களுக்கும் hook knife எனப்படும் கத்தியைக் கட்டாயமாக்கியுள்ளது.



