Latestமலேசியா

சுயசேவை சலவை இயந்திரத்தில் கார் கம்பளத்தைக் காய வைத்த ஆடவர்கள்; வைரலாகும் வீடியோ

கோலாலம்பூர், டிசம்பர் 21-சுயசேவை சலவைக் கடையில் கார் கம்பளத்தை (carpet) இரு ஆடவர்கள் காய வைத்த சம்பவம் வைரலாகியுள்ளது.

பெரியக் கம்பளத்தை மடக்கி, 14 கிலோ எடை துணிகளைக் காய வைக்கும் இயந்திரத்தினுள் இருவரும் புகுத்த முயற்சிப்பது CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

அவர்களில் ஒருவர் பின்னர் பலங்கொண்டு கம்பளத்தை வெளியில் பிடித்து இழுக்கிறார்.

இதனால் அவ்வியந்திரம் சற்று சேதமடைந்ததாகத் தெரிகிறது.

இச்சம்பவம் எங்கே எப்போது நடந்தது என்ற தகவல்கள் இல்லை.

என்றாலும் வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள் அவ்விரு ஆடவர்களின் செயலைக் கடுமையாகக் கண்டித்தனர்.

“பார்த்தால் பக்குவமடைந்த ஆண்கள் போல் இருக்கிறது, ஆனால் செயலில் அது தெரியவில்லையே” என பலர் சாடினர்.

கார் கம்பளத்தை வெளியில் வெயிலில் காய வைக்க சோம்பல் படும் இவர்களின் பொறுப்பற்றச் செயலால், சலவைக் கடை உரிமையாளருக்குத் தான் நட்டம் என்றும், எக்காரணம் கொண்டும் இதை ஏற்க முடியது என்றும் பலர் கொந்தளித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!