கோலாலம்பூர், டிச 20 – 16 துண்டுகள் பொரித்த கோழி இறைச்சியை உணவு விநியோகிப்பாளர் ஒருவர் திடீரென வீட்டிற்கு கொண்டுவந்தால் தம்பதியர் ஒருவர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
தனது வீட்டின் வேலிப் பகுதிக்கு அருகே உணவு பொட்டலத்தை வழங்குவதற்காக Seri Rahayu என்ற தனது மனைவியின் பெயரைக்கூறி உணவு விநியோகிப்பாளர் அழைத்துபோது அந்த ஆட்வர் வாய்மூடி மௌமாக இருந்து தலையை மட்டும் அசைப்பது Tik Tok கணக்கில் பகிர்ந்துகொண்ட ரகசிய கண்காணிப்பு கேமராவின் காணொளியில் காணமுடிகிறது.
விநியோகிப்பாளர் கொண்டுவந்த உணவுப் பொருளை ஆர்டர் செய்தாயா என அந்த ஆடவர் தனது மனைவி Seri Rayuவிடம் கேட்டபோது அதற்கு அவர் தாம் ஆர்டர் செய்யவில்ல என்றும் மறுமொழி தெரிவித்தார.
இந்த உணவை ஆர்டர் செய்தவரின் முகவரியை சரிபார்க்கும்படி உணவு விநியோகிப்பாளரிடம் அந்த தம்பதியர் தெரிவிக்கவே உணவை விநியோகிப்பாளர் அந்த உணவுப் பொருளை திரும்ப எடுத்துக்கொளவதையும் பார்வையிட முடிகிறது.
எனினும், அந்த கிராமத்தின் வீட்டு முகவரியை சரிபார்த்துவிட்டு மீண்டும் அதே முகவரியிலுள்ள வீட்டிற்கு திரும்பிய போதுதான் இக்குழப்பத்திற்கு காரணத்தை கண்டறிந்துள்ளனர் எந்த தம்பதியார்.
அந்த தம்பதியரின் ஆறு வயது மகன்தான் தனது தாயின் ஆன்லைன் கணக்கைப் பயன்படுத்தி எட்டு செட் பொரித்த கோழியை ஆர்டர் செய்த உண்மை பின்னர் பெற்றோர்களுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து வேறுவழியில்லாமல் அதனை அவர்கள் பெற்றுக்கொண்டனர்.