மோஸ்கோ, டிசம்பர்-24 – உலகப் புகழ்பெற்ற பிரிட்டனின் சாக்லேட் முத்திரையான Cadbury, 170 ஆண்டுகளில் முதன் முறையாக பிரிட்டன் அரச குடும்பத்திற்கான தருவிப்பாளர் அந்தஸ்தை இழந்துள்ளது.
மன்னர் மூன்றாம் சார்ல்ஸால் Royal Warrant அரச உத்தரவு புதுப்பிக்கப்படாத 100 நிறுவனங்களில் Cadbury-யும் ஒன்றாகும்.
6 முடியாட்சிகளில் Cadbury-க்கு அந்த அங்கீகாரம் வழங்கப்படாமல் போனது இதுவே முதன் முறை.
பக்கிங்ஹம் அரண்மனையின் Royal Warrant வைத்திருப்போர் சங்கம் அம்முடிவை வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் அரச குடும்பத்துக்கு குறைந்தது 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பொருட்களைத் தருவிக்கும் முத்திரைகளுக்கு அந்த Royal Warrant அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.
1854-ல் விக்டோரியா மகாராணியார் Cadbury-க்கு முதன் முதலில் அந்த அங்கீகாரத்தை வழங்கினார்.
அரசியார் இரண்டாம் எலிசபெத் 2022-ல் இறக்கும் வரை அது ‘உறவுத்’ தொடர்ந்தது.
Cadbury சாக்லேட் விரும்பியான இரண்டாம் எலிசபெத்துக்கு, ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்மஸ் பண்டிகையின் போதும், Cadbury சாக்லேட்டுகள் பரிசுக் கூடைகளில் அரண்மனைக்கு அனுப்பப்பட்டு வந்தன.
எனினும், அண்மைய சில ஆண்டுகளாக அரச குடும்பத்திற்கான Cadbury சாக்லேட்டுகளின் தருவிப்பு கணிசமாகக் குறைந்தது.
Cadbury-யை அதன் போட்டியாளரான அமெரிக்காவைச் சேர்ந்த Mondelez நிறுவனம் கையப்படுத்தியதும் அதற்குக் காரணம்.
அதோடு, ‘பாரம்பரியத்தை மறந்து’ வித்தியாசமான புதிய வகை சாக்லேட்டை அறிமுகப்படுத்தியது மற்றும் தயாரிப்பு தொழிற்சாலையை வெளிநாட்டுக்கு மாற்றியது உள்ளிட்ட காரணங்களாலும் அதன் பெயர் வீணடிக்கப்பட்டது.