
கோலாலம்பூர், ஜூலை 18 – தப்பியோடிய தொழிலதிபர் லோ டேக் ஜோ என்றழைக்கப்படும் ஜோ லோ, கான்ஸ்டான்டினோஸ் அகில்லெஸ் வெய்ஸ் என்ற கிரேக்க பெயரில் போலி ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஷாங்காயில் உள்ள மாளிகை ஒன்றில் வசித்து வருவதாக 1MDB ஊழலை அம்பலப்படுத்திய இரண்டு புலனாய்வு பத்திரிகையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த ஆண்டு, முன்னாள் காவல் துறைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருடின் ஹுசைன், தமது துறையினர் லோவைக் கண்காணித்து வருவதாகவும், ஆனால் அவர் இருக்கும் இடம் குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை என்று முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு முன்பாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், லோ சீனாவில் இருக்கிறாரா என்பதை அதிகாரிகளால் உறுதிப்படுத்தமுடியவில்லை என்று கூறியிருந்தார்.
1MDB-யிலிருந்து 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை திருட திட்டமிட்டதாக மலேசியா மற்றும் அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்ட லோவுக்கு எதிராக 2018 இல் இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.