
புத்ராஜெயா, டிசம்பர் 26-1MDB நிதி முறைகேடு வழக்கில் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தனது தற்காப்புக்காக சமர்ப்பித்த 4 “அரபு நன்கொடை” கடிதங்களும் போலியானவை என உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.
நஜீப், அந்த கடிதங்களின் உண்மைத்தன்மையை சவூதி அரச குடும்பத்திடம் உறுதிப்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை;
தவிர, அந்த ‘நன்கொடைகள்’ அமைச்சரவை பதிவுகளிலும் இல்லை என நீதிபதி குறிப்பிட்டார்.
விசாரணையில், பணம் நேரடியாக சவூதி அரச குடும்பத்திடமிருந்து வரவில்லை என்பது உறுதியாகியுள்ளது; மாறாக, 1MDB நிதி மூலமாக மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் வழியாக வந்தது என நீதிமன்றம் கண்டறிந்தது.
இதனால், “அரபு நன்கொடை” என்ற நஜீப்பின் வாதம் முற்றிலும் நிராகரிக்கப்படுவதாகவும், இதையே அவர் திரும்ப திரும்ப கூறக் கூடாது என்றும் நீதிபதி சொன்னார்.
1MDB வழக்கில் இன்று காலை தீர்ப்பை வாசித்த போது Datuk Collin Lawrence Sequerah அதனைக் குறிப்பிட்டார்.
வெள்ளிக் கிழமை தொழுகைக்குப் பிறகு பிற்பகல் 3 மணிக்குத் தீர்ப்பு தொடர்ந்து வாசிக்கப்படும்.



