
பத்து மலை, டிசம்பர்-29 – பத்துமலையில் 140 அடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் முருகன் சிலை நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு, மாபெரும் விழாவொன்று நடைபெறவுள்ளது.
ஜனவரி 1-ஆம் தேதி காலை 7 மணிக்கு ஹோமத்துடன் அப்பெருவிழா தொடங்குமென, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா அறிவித்தார்.
பின்னர் வயதானவர்கள், உடற்பேரு குறைந்தவர்கள் என அனைத்து பக்தர்களும் முருகப் பெருமானின் காலடியில் பன்னீர் அபிஷேகம் செய்யலாம்.
மாலை 4 மணிக்கு உள்ளூர் மற்றும் அனைத்துலக கலைஞர்களின் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெறும்.
இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடையுமென, இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் நடராஜா கூறினார்.
2006-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த முருகன் சிலை உலகப் பிரசித்திப் பெற்றதாகும்.
குறிப்பாக வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் வியந்து பார்க்கும் அடையாளமாகும்.
20 ஆண்டுகளைப் பூர்த்திச் செய்வதை முன்னிட்டு, கடந்த இரண்டு மாதங்களாகவே சிலை சுத்தம் செய்யப்பட்டு புதிய வர்ணம் பூசப்பட்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.



