ஜோகூர், டிசம்பர் 5 – கடந்த நவம்பர் 29ஆம் திகதி, ‘பாரதியார் கோப்பை’ என்ற பெயரில் ஜோகூர் மாநிலத்தில் காற்பந்தாட்டம் போட்டி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம் கண்டது.
முதன் முறையாக 12 வயதிற்குட்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குக் காற்பந்தாட்டம் லீக் (League) முறையில் மசாய் கால்பந்து கழகத்தின் ஏற்பாட்டில் பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறுகிறது.
இப்போட்டியை அதிகாரப்பூர்வமாக ஜோகூர் மாநில கல்வி இலக்காவின் பாலர் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளின் துணை தலைவர் ரவிச்சந்திரன் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் கால்பந்து வீரர் ஜாம்பவான் Nasir Yusof மற்றும் ஜோகூர் இந்திய வணிக ஜிபா தலைவர் சிவக்குமார் ஆகியோரும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து, கடந்த நவம்பர் 29 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி வரை தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளியில் லீக் முறையில் இப்போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு போட்டியில் 10 தமிழ்ப்பள்ளிகள் களம் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.