Latestஉலகம்

2026 தொடக்கத்தில் துபாயில் சேவைக்கு வரும் பறக்கும் டாக்சிகள்

துபாய், செப்டம்பர் -19, ஐக்கிய அரசு சிற்றரசின் மிகவும் புகழ்பெற்ற நகரான துபாய், 2026-ன் முதல் காலாண்டில் ‘பறக்கும் டாக்சி’ சேவையை அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது.

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து அதிகாரத் தரப்பு அதனைக் கோடி காட்டியது.

எந்நேரமும் பரபரப்பாகவே இருக்கும் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, துபாயை ‘நகரும்’ மாநகரமாக விளங்கச் செய்யும் முயற்சியில் அந்த ஆகாய டாக்சிகள் அறிமாகின்றன.

தற்போதைக்கு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

தவிர, பிரிட்டனின் Skyports நிறுவனத்துடன் இணைந்து Vertiport எனப்படும் செங்குத்தான விமான நிலையத்தை வடிவமைக்கும் கட்டத்திலும் நுழைந்துள்ளோம் என அந்நிறுவனத்தின் பேச்சாளர் சொன்னார்.

ஆகாய டாக்சிகளுக்காக 4 Vertipot விமான நிலையங்கள் கட்டப்படும்; அவற்றில் இரண்டு 2026 தொடக்கத்திலேயே திறக்கப்படும்.

கட்டமைப்பு வசதிகள் தவிர்த்து, ஆகாய டாக்சிகளுக்கான’ கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பாக முறையும் ஏற்படுத்தப்படும்.

இப்புதிய போக்குவரத்து வசதி மக்களுக்கு எளிதாகக் கிடைப்பது உறுதிச் செய்யப்படும்.

அதற்காக வர்த்தகப் பங்காளியுடன் பேசி வருகிறோம்.

ஒரு ஹெலிகாப்டர் பயணத்தை விட இந்த ஆகாய டேக்சி சேவைக் கட்டணம் மிக மிக மலிவானதாக இருக்குமென்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!