Latestஉலகம்

2027-ல் விண்வெளி சுற்றுலா; 2 டிக்கெட்டுகளை விற்கும் சீன நிறுவனம்

பெய்ஜிங், அக்டோபர்-25 – சீனாவைச் சேர்ந்த Deep Blue Aerospace எனும் நிறுவனம், 1.5 மில்லியன் யுவான் அதாவது 916,075 ரிங்கிட் கட்டணத்தில் விண்வெளிப் பயணத்துக்கான இரு டிக்கெட்டுகளை விற்கிறது.

2027-ஆம் ஆண்டு பயணத்துக்கான அவ்விரு டிக்கெட்டுகளும் நேற்று விற்பனைக்கு வந்தன.

நவம்பர் வாக்கில் டிக்கெட்டுகளை மேலும் அதிகரிக்க அந்நிறுவனம் இலக்குக் கொண்டுள்ளது.

அப்பயணத்தின் போது ராக்கெட் விண்வெளியைச் சென்றடையும், ஆனால் சுற்றுப்பாதையில் நுழையாது.

ராக்கெட்டை ஏவுவதற்கு ஆகும் செலவைக் குறைக்க, மீண்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட்டைப் பயன்படுத்தப் போவதே அதற்குக் காரணம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அண்மையக் காலமாகவே சீன நிறுவனங்கள் வணிகமய விண்வெளி சுற்றுலாவில் ஆர்வம் காட்டி வருகின்றன.

கடந்த மே மாதம் தான், சீன அரசாங்க ஆதரவிலான CAS Space நிறுவனம், 2028-ஆம் ஆண்டில் விண்வெளி சுற்றுலாவை ஏற்பாடு செய்யப் போவதாகக் கூறியிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!