2034 ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்து போட்டி சவுதி அரேபியா நடத்துவது உறுதியானது

ரியாத், டிச 12 – 2034 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்து போட்டியை சவுதி அரேபியா (Saudi Arabia ) ஏற்று நடத்துவது உறுதியானது. ரியாத்தில் (Riyadh) நடைபெற்ற அனைத்துலக காற்பந்து சம்மேளனமான FIFA வின் அனைத்து 211 உறுப்பு சங்கங்களும் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதே வேளையில் 2034 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்து போடடியை மொரோக்கோ (Morocco), போர்த்துகல் (Portugal) மற்றும் ஸ்பெய்ன் (Spain) ஆகியவை கூட்டாக ஏற்று நடத்தவிருக்கின்றன.
இதுதவிர 2030 ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் மூன்று ஆட்டங்கள் அர்ஜெண்டினா (Argentina) , பராகுவே (Paraguay) மற்றும் உருகுவேவில் (Uruguay) நடைபெறவிருக்கின்றன. உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் 100 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேற்காசியாவில் இரண்டாவது முறையாக உலகக் கிண்ண காற்பந்து போட்டி நடைபெறும் வகையில் 2034 ஆம் ஆண்டுக்கான போட்டியை ஏற்று நடத்தும் உபசரணை நாடாக சவுதி அரேபியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்து போட்டி கட்டாரில் நடைபெற்றது. உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கு தயாராகும் பொருட்டு சவுதி அரேபியா 11 புதிய விளையாட்டரங்குகளையும் 185,000 அறைகளைக் கொண்ட புதிய ஹோட்டல்களையும் நிர்மணிக்கவிருக்கிறது.