Latestமலேசியா

28 தமிழ்ப்பள்ளிகளுக்கு உலகத் தரத்திலான கால்பந்துகளை அன்பளிப்பாக வழங்கிய பினாங்கு இந்து அறப்பணி வாரியம்

ஜியோர்ஜ்டவுன், அக்டோபர்-20, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB)
ஃபீஃபா (FIFA) உலகத் தரத்திலான 200 சிறப்பு கிரேட் கால்பந்துகளை பினாங்கிலுள்ள 28 தமிழ்ப் பள்ளிகளுக்கும் அன்பளிப்பாக வழங்கியது.

MFL எனப்படும் மலேசிய கால்பந்து லீக், பினாங்கு FC Sdn Bhd மற்றும் ஷெக்கினா PR Sdn Bhd ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற அந்நிகழ்வுக்கு, பினாங்கு முன்னாள் முதல் அமைச்சர் லிம் குவான் எங் தலைமைத் தாங்கினார்.

இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான RSN ராயர், துணைத் தலைவர் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் உள்ளிட்ட பிரமுகர்களும் அதில் பங்கேற்று சிறப்பித்தனர்.

மாணவர்கள் மத்தியில் விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒவ்வொரு பந்தின் மதிப்பு 350 ரிங்கிட்டாகும்.

இது போன்ற முயற்சிகளின் வாயிலாக அடிமட்ட அளவில் கால்பந்து விளையாட்டை ஒரு கலாச்சாரமாக்கி, அவ்விளையாட்டின் மீதான மாணவர்களின் ஆர்வத்தை அதிகரித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொணர முடியுமென செனட்டர் லிங்கேஷ்வரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இது, மாணவர் பருவத்திலேயே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் முன்னெடுப்பும் கூட என்றார் அவர்.

இந்த ஒத்துழைப்பின் வாயிலாக கல்வியில் மட்டுமின்றி விளையாட்டிலும் சிறந்து விளங்கும் மாணவர்களை உருவாக்க முடியும்.

All Rounder அதாவது எல்லாவற்றிலுமே சிறந்து விளங்கும் மாணவர்களை நமது தமிழ்ப்பள்ளிகளும் அதிகளவில் உருவாக்க இது போன்ற முயற்சிகள் துணைபுரியும் என Dr லிங்கேஷ் மேலும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!